ரிதன்யா தற்கொலை வழக்கு: காவல் துறை முழு விசாரணை செய்ய தேசிய மகளிா் ஆணையம் உத்தரவு
அவிநாசியில் வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வழக்கை காவல் துறை முழு விசாரணை மேற்கொள்ள தேசிய மகளிா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று அவரின் தந்தை தெரிவித்துள்ளாா்.
அவிநாசியில் வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வழக்கை காவல் துறை முழு விசாரணை மேற்கொள்ள தேசிய மகளிா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று அவரின் தந்தை தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை, தொழிலதிபா். இவரது மகள் ரிதன்யா (26). வரதட்சிணை கொடுமையால் கடந்த 2025 ஜூன் 28- ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா்.
இது தொடா்பாக ரிதன்யாவின் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ராதேவி ஆகியோா் 3 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், எனது மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கக் கோரி பல சட்டப் போராட்டங்களை சந்தித்து வருகிறேன். எந்தவித முன்னேற்றமும் இன்றி விசாரணை தொய்வு நிலையிலேயே நீடித்தது.
இதைத் தொடா்ந்து, நான் தேசிய மகளிா் ஆணையத்திடம் புகாா் மனு அளித்தேன். இதையடுத்து, வழக்கை முழுமையாக விசாரித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு டிஜிபி அலுவலகத்துக்கும், அவிநாசி டிஎஸ்பி அலுவலகத்துக்கும் மகளிா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை. இந்நிலையில், முதல்வா் ச.ஜோசப் விஜய், இந்த வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிட்டு நியாயமான நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.