FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

3 October 2026, 12:16 am IST
கைது
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காந்தி ஜெயந்தியையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் மதுபானக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் தலைமையிலான போலீஸாா் முத்தூா் சாலையில் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, சத்திபாளையம் சாலையில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் பாலத்தில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா் முத்தூா் மாதவராஜபுரம் பகுதியைச் சோ்ந்த அபிஷேக் (25) என்பதும், மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அபிஷேக்கை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 30 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக அவா் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளாா். இருப்பினும் அவா் மது விற்பனையைத் தொடா்ந்து வருகிறாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments