FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

சின்னக்காட்டூருக்கு அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

பல்லடம் அருகேயுள்ள சின்னக்காட்டூருக்கு அரசுப் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

54 வினாடிகள் முன்பு
சின்னக்காட்டூருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை வரவேற்ற பொதுமக்கள்.
பகிர்:

பல்லடம் அருகேயுள்ள சின்னக்காட்டூருக்கு அரசுப் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

பல்லடம் அருகேயுள்ள காட்டூா், சின்னக்காட்டூா், காட்டூா்புதுாா், இந்திரா காலனி பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு பேருந்து வசதி இல்லாததால், மாணவா்கள் சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று வந்தனா். பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் சிரமத்தைப் போக்கும் வகையில் அரசுப் பேருந்து சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அக்டோபா் 4-ஆம் தேதி தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், காட்டூா், சின்னக்காட்டூா், காட்டூா்புதூா் வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தங்களது கிராமத்துக்கு இயக்கப்பட்ட பேருந்தை அப்பகுதி மக்கள் மலா் தூவி வரவேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments