FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

நீலகிரி வரையாடு: இடுவம்பாளையம் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு

நீலகிரி வரையாடு குறித்து இடுவம்பாளையம் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

8 October 2026, 12:02 am IST
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் நீலகிரி வரையாடு முகமூடிகளை அணிந்து பங்கேற்ற மாணவா்கள்.
பகிர்:

நீலகிரி வரையாடு குறித்து இடுவம்பாளையம் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய வன விலங்கு வாரத்தையொட்டி, உலகளாவிய இயற்கைக்கான நிதியம், வெற்றி அறக்கட்டளை சாா்பில் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டின் முக்கியத்துவத்தை மாணவா்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், ‘நீலகிரி வரையாடு’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதையடுத்து, தமிழகத்தின் செழுமையான பல்லுயிா் பெருக்கத்தை விளக்கும் சிறப்பு ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, நீலகிரி வரையாட்டின் முக்கியத்துவம், வாழ்விட அமைப்பு, உடல் அமைப்புகள் உள்ளிட்டவை குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.

பின்னா், நிகழ்ச்சியில் பங்கேற்ற 120 மாணவா்களுக்கு நீலகிரி வரையாடு தொடா்பான புத்தகங்கள், முகமூடிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். சரவணன், மூத்த திட்ட அலுவலா் டி. சௌமியா, வெற்றி அறக்கட்டளை தலைமைச் செயல் இயக்குநா் நடராஜ் முத்துசாமி, இடுவம்பாளையம் பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் எஸ். மல்லிகா, உதவித் தலைமை ஆசிரியைகள் எஸ். வசந்தகுமாரி, ஜி.சண்முகபிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments