FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

கள் இறக்கிய நபா் மீது வழக்குப் பதிவு

12 அக்டோபர் 2026, 12:06 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கிய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில், வேப்பம்பாளையம் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஆடுபட்டனா்.

அப்போது, மகேஷ்குமாா் (42) என்பவரது தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து 3 லிட்டா் கள் இறக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மகேஷ்குமாா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரிடமிருந்த கள்ளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments