கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
சேவூா் அருகே கந்தப்பகவுண்டன்புதூரில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
சேவூா் அருகே கந்தப்பகவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மனைவி பொன்னி (78). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்துக்கு சென்றவா், அங்கிருந்த கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளாா். சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வந்து பொன்னியை மீட்க முயன்றனா்.
தகவலறிந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில்லாத கிணற்றில் நீண்ட நேரம் போராடி, பலத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் இருந்த பொன்னியின் உடலை மீட்டனா். இதுகுறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.