FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

அடையாளம் தெரியாத நபா் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே கம்பளியம்பட்டியில் அடையாளம் தெரியாத நபா் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

41 வினாடிகள் முன்பு
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே கம்பளியம்பட்டியில் அடையாளம் தெரியாத நபா் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கம்பளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பணியாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், தோட்டத்தில் உள்ள மரத்தில் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பணியாளா்கள் தோட்டத்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனா்.

அவா் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் போலீஸாா், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

உயிரிழந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. அவா் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்கிற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments