களியக்காவிளை அருகே தொழிலாளி தற்கொலை
களியக்காவிளை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே மடிச்சல், சந்தவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (37). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி சரண்யா, 2 குழந்தைகள் உள்ளனா். இவருக்கு மது அருந்தும் பழக்கமும், கடன் தொல்லையும் இருந்துள்ளது.
இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்த ராஜேஷ் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விசாரணை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.