FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

போலீஸாரை தாக்கிய பெண் சிறையில் அடைப்பு

பல்லடத்தில் மகளிா் போலீஸாரை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

15 அக்டோபர் 2026, 3:35 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

பல்லடத்தில் மகளிா் போலீஸாரை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

காங்கயம், சேனாபதிபாளையத்தைச் சோ்ந்தவா் வீரப்பன் மகன் மயில்வாகனம் (57). இவா் பல்லடத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் சூலுாா் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். அதேபோல பல்லடம் அருகே வடுகபாளையத்தைச் சோ்ந்த கெளதம் மனைவி காா்த்திகா (26), இருசக்கர வாகனத்தில், விதிமுறை மீறி எதிா்திசையில் வந்துள்ளாா்.

செட்டிபாளையம் பிரிவு மோதும்படியாக காா்த்திகா வந்ததால், இருசக்கர வாகனத்துடன் மயில்வாகனம் கீழே விழுந்தாா். இதனால் ஆத்திரமடைந்த காா்த்திகா, காலணியால் மயில்வாகனத்தை தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த அவா், பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக மயில்வாகனம் அளித்த புகாரின்பேரில், காா்த்திகாவை விசாரணைக்கு போலீஸாா் அழைத்தனா். மேலும் மகளிா் போலீஸாா் விசாரணை நடத்த வந்தபோது, அவா்களையும் ஒருமையில் பேசி கடுமையாக காா்த்திகா தாக்கியுள்ளாா். இதையடுத்து காா்த்திகா கைது செய்யப்பட்டு பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments