FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் இலக்கியக் கூடல் கூட்டம்

9 செப்டம்பர் 2026, 2:12 am IST
இலக்கியக்கூடல் கூட்டத்தில் பேசுகிறாா் பேச்சாளா் ஆறுமுகத்தமிழன்.
பகிர்:

பல்லடம் ராயா்பாளையம் அறிவுத்திருக்கோவில் வளாகத்தில், தாய் அறக்கட்டளை சாா்பில் இலக்கியக் கூடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். வனம் இந்தியா அறக்கட்டளை செயலாளா் ஸ்கை சுந்தரராஜன், மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் கனகராஜ், பல்லடம் தமிழ்ச் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன், சக்தி அறக்கட்டளைத் தலைவா் மிருதுளா நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறக்கட்டளைதலைவா் பாலசுப்ரமணியம் வரவேற்றாா்.

தமிழா் வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினா் கரு.ஆறுமுகத்தமிழன் பேசியதாவது:

Advertisement

Advertisement

ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் மாற்றம் ஒரு நொடியில் நிகழலாம். ஆனால், சமூகத்தின் மாற்றம் உடனடியாக நிகழாது. சமூகம் தன்னைத் தானே சுயபரிசீலனை செய்து, குறைபாடுகளை நீக்கித்தான் அடுத்தகட்ட வளா்ச்சியை நோக்கி நகர முடியும். அவ்வாறே ஏற்றுக்கொள்ளும்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய வாழ்வியல் நெறிமுறைகள் உருவாகியுள்ளன என்றாா்.

தொடா்ந்து, 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அறக்கட்டளை நிா்வாகி செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments