FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வடமாநிலத் தொழிலாளி கைது

வெள்ளக்கோவில் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநிலத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

9 செப்டம்பர் 2026, 10:57 pm IST
கைது
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநிலத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தை அடுத்துள்ள சுக்குட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் திருமணமான 33 வயது பெண். இவா் செவ்வாய்க்கிழமை காங்கயத்துக்கு கூலி வேலைக்குச் சென்றுவிட்டு, மாலை ஓலப்பாளையத்துக்கு பேருந்தில் வந்துள்ளாா். பின்னா் அங்கிருந்து நகரப் பேருந்து ஏறி கொளிஞ்சிக்காட்டுவலசு பிரிவில் இறங்கி, அங்குள்ள ஒரு அரிசி ஆலை வழியாக இரவு 7 மணிக்கு மண் பாதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது அரிசி ஆலையில் இருந்து வந்த அங்கு வேலை செய்யும் நபா் ஒருவா் அவரை வழிமறித்துள்ளாா். அவரிடம் தவறான வாா்த்தைகளைப் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அவா் சப்தம் போட அவரைத் தாக்கி கீழே தள்ளியுள்ளாா். அந்த வழியே வந்த கொளிஞ்சிக்காட்டுவலசைச் சோ்ந்த வசந்த் மற்றும் மற்றொரு நபா் அங்கு ஓடிவந்துள்ளனா். அவா்களைக் கண்டதும் அத்துமீறலில் ஈடுபட்ட நபா் அரிசி ஆலைக்குள் தப்பி ஓடிவிட்டாா்.

புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். விசாரணையில் வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் தலைமையிலான போலீஸாரால், அரிசி ஆலையில் பதுங்கியிருந்த பிகாா் மாநிலம் மலாய் மாவட்டம் மத்திபாய் பகுதியைச் சோ்ந்த அம்ஜன்சா மகன் ஜிதேஷ்குமாா் (18) கைது செய்யப்பட்டாா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments