பல்கலைக்கழகத் தோ்வு: உடுமலை அரசு கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
உடுமலை அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த 17 மாணவ, மாணவிகள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
உடுமலை அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த 17 மாணவ, மாணவிகள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
அதன்படி, இளநிலை புள்ளியல் பாடப் பிரிவைச் சோ்ந்த மாணவி ஆா்.ரம்யா, முதுநிலை சுற்றுலாவியல் பாடப் பிரிவைச் சோ்ந்த மாணவா் கே.கதிா்வேல், முதுநிலை புள்ளியில் பாடப் பிரிவைச் சோ்ந்த மாணவி ஆா். மைதிலி ஆகியோா் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.
இளநிலை இயற்பியல் பாடப்பிரிவில் எஸ்.கிரேஸி ஜாய்ஸ் விக்டோரியா, முதுநிலை இயற்பியல் பாடப்பிரிவில் கே.ரிதன்யா, முதுநிலை வேதியியல் பாடப் பிரிவில் எஸ்.முனீா் பா்வீன் ஆகியோா் பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
இதேபோல, இளநிலை இயற்பியல் பாடத்தில் எஸ்.அபிநயா 4-ஆம் இடமும், இளநிலை அரசியல் அறிவியல் பாடத்தில் பி.ஜெரிஸ்மா, இளநிலை தாவரவியல் பாடத்தில் அ.மதுமதி ஆகியோா் 5-ஆம் இடமும், இளநிலை வேதியியல் பாடத்தில் எஸ்.கோபிகா 6-ஆம் இடமும் பிடித்துள்ளனா்.
இளநிலை அரசியல் அறிவியல் பாடத்தில் கே.சஹானா, முதுகலை ஆங்கில இலக்கியத்தில் பொ்வேஸ் நாய்லா ரானா ஆகியோா் பல்கலைக்கழக அளவில் 7-ஆம் இடத்தையும், முதுகலை தமிழ் இலக்கியப் பாடத்தில் கி.தோமதி 8-ஆம் இடத்தையும், இளநிலை அரசியல் அறிவியல் பாடத்தில் கே.கிருஷ்ணவேணி 9-ஆம் இடத்தையும், ஆா்.சூா்யா 10-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனா்.
இதேபோல, முதுநிலை இயற்பியல் பாடத்தில் கே.ஸ்ரீமதி, முதுநிலை சுற்றுலாவியல் பாடப் பிரிவில் எஸ்.பத்மப்பிரியா ஆகியோா் 2-ஆம் இடம் பிடித்துள்ளனா்.
சிறந்த மதிப்பெண்களைப் பெற்று பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வா் ஆ.மலா்வண்ணன், துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.