FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அணு இயற்பியல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

சஹா அணு இயற்பியல் நிறுவனத்தில் 62 அறிவியல், தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் துணைப் பணிப் பிரிவு பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து...

அணு இயற்பியல் நிறுவனத்தில் வேலை - கோப்புப்படம்
பகிர்:

மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் பட்டதாரிகள், டிப்ளமோ மற்றும் தொழிற்பயிற்சி தகுதி பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான நல்வாய்ப்பாக, மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ், கொல்கத்தா, பிதான்நகர் பகுதியில் அமைந்துள்ள சஹா அணு இயற்பியல் நிறுவனத்தில் 62 அறிவியல், தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் துணைப் பணிப் பிரிவு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த பார்ப்போம்...

பணி: சயின்டிஸ்ட் ‘சி’

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 5

தகுதி: இயற்பியல், அப்ளைடு இயற்பியல், ஆப்டிக்ஸ், போட்டானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேவைப்படுகிறது. சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சயின்டிபிக் அசிஸ்டென்ட் ‘பி’

காலியிடங்கள்: 8

தகுதி: கணினி, எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன் ‘பி’

காலியிடங்கள்: 18

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்-2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: உதவி நிர்வாக அலுவலர்

காலியிடங்கள்: 1

பணி: கீழ்நிலை எழுத்தர்

காலியிடங்கள்: 7

பணி: ஒர்க் அசிஸ்டென்ட் ‘ஏ’

காலியிடங்கள்: 11

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: செக்யூரிட்டி கார்டு ‘ஏ’

காலியிடங்கள்: 8

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஹல்வாய்-கம்-குக்

காலியிடங்கள்: 4

தகுதி: பத்தம் வகுப்பு தேர்ச்சியுடன் கேட்டரிங் துறையில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணிக்கு ஏற்ப தேர்வு முறை மாறுபடும். பொதுவாக எழுத்துத் தேர்வு, தொழில் திறன் தேர்வு, தட்டச்சுத் திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: சயின்டிஸ்ட் ‘சி’ மற்றும் சயின்டிபிக் அசிஸ்டென்ட் ‘பி’ பணிகளுக்கு ரூ.500. இதர பணிகளுக்கு ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பணிமாற்று அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.saha.ac.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிடிஎப் நகலுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.9.2026

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி நாள்: 18.9.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

SINP Recruitment 2026 for 62 Various Scientific, Technical, Administrative posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments