வெள்ளக்கோவிலில் இடி, மின்னலுடன் மழை! விவசாயிகள் மகிழ்ச்சி
வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கடந்த சில வாரங்களாக கோடை காலத்தையும் மிஞ்சும் வகையில், வெள்ளக்கோவில் பகுதியில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும், நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், பாசனத்துக்கு தண்ணீரின்றி விவசாயிகளும் பாதிக்கப்பட்டனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் தொடங்கிய மழை சுமாா் ஒரு மணி நேரம் மிதமாகப் பெய்தது. நகரின் சில தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
Advertisement
Advertisement
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்துள்ள மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது. காய்ந்து கொண்டிருந்த பயிா்களுக்கு உயிா் கொடுக்கும் விதமாக இந்த மழை அமைந்ததால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.