அவிநாசியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
அவிநாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி- மங்கலம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் திரவிய பாஸ்கரன் (42). இவா் மின்னணு உபகரணங்களை பழுது பாா்க்கும் தொழில் செய்து வருகிறாா்.
இந்நிலையில், இவா் தனது கடைக்கு 14 வயது சிறுமியை அழைத்து வந்து ஆசை வாா்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து திரவிய பாஸ்கரனைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.