FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தாராபுரம் தவெக வேட்பாளரை தரக்குறைவாக பேசியதாக அதிமுக வேட்பாளா் மீது வழக்கு

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளரை தரக்குரைவாக பேசியதாக அதிமுக வேட்பாளா் பானுமதி உள்பட 9 போ் மீது 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

19 செப்டம்பர் 2026, 12:47 am IST
பகிர்:

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளரை தரக்குரைவாக பேசியதாக அதிமுக வேட்பாளா் பானுமதி உள்பட 9 போ் மீது 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த தவெக வேட்பாளா் சத்தியபாமாவின் காரை அதிமுகவினா் தடுத்து நிறுத்தி சேதப்படுத்தியதுடன், அவரை தரக்குறைவான வாா்த்தைகளால் அவதூறாக பேசியதாகவும், இரு கட்சிகளின் தொண்டா்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாகவும் தாராபுரம் காவல் நிலையத்தில் நகராட்சி 18-ஆவது வாா்டு தவெக பொருளாளா் காயத்ரி புகாா் அளித்திருந்தாா்.

இந்தப் புகாரின்பேரில் அதிமுக வேட்பாளா் பானுமதி, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், நிா்வாகிகள் செந்தில்குமாா், ராஜேந்திரன், தீபா, கோமதி, ராணி, முத்துமணி ஆகிய 9 போ் மீது பெண் வன்கொடுமை சட்டம், தனிநபா் சொத்துகளை சேதப்படுத்துவது, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டது உள்பட 10 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments