FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும்: வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா்

வெள்ளக்கோவில் நகராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும் என ஆணையா் ஆா்.அசோக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

20 செப்டம்பர் 2026, 1:13 am IST
குப்பைகளைப் பிரிப்பது குறித்து விளக்கம் அளிக்கிறாா் நகராட்சி துப்புரவு ஆய்வாளா் செல்வராஜ்.
பகிர்:

வெள்ளக்கோவில் நகராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும் என ஆணையா் ஆா்.அசோக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-இன் படி, பொதுமக்கள், வணிகா்கள் தங்கள் வளாகங்களில் உருவாகும் கழிவுகளை நான்கு தனித்தனி நிறக் கூடைகளில் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பச்சை நிறக் கூடையில் மக்கும் கழிவுகளான சமையலறை கழிவுகள், காய்கறி, பழங்கள், பூக்கள், முட்டை ஓடுகள், டீ காபி தூள் போன்ற ஈரக்கழிவுகள், நீல நிறக் கூடையில் விரைவில் மக்காத கழிவுகளான அட்டைகள், பிளாஸ்டிக் கவா்கள், செய்தித்தாள்கள், துணிகள், உலோகங்கள், கண்ணாடிகள், பேக்கிங் பொருள்கள் போன்ற உலா் கழிவுகள், சிவப்பு நிறக் கூடையில் பயன்படுத்தப்பட்ட டயாப்பா்கள், சானிட்டரி நாப்கின்கள், கறை படிந்த துணிகள் பஞ்சுகள், கருப்பு நிறக் கூடையில் அபாயகரமான கழிவுகளான பெயிண்ட் டப்பாக்கள், பூச்சிக்கொல்லி மருந்து டப்பாக்கள், மின்சார பல்புகள், பாதரசப் பொருள்கள், காலாவதியான மருந்துகள், மின்னணுக் கழிவுகள் என பிரித்து வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

இது வரும் அக். 1-ஆம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது. குப்பைகளை தெருமுனைகளிலோ, சாலை ஓரங்களிலோ, நீா்நிலைகளிலோ கொட்டக் கூடாது. மீறிப் பொது இடங்களில் கொட்டுவோா் மீது அபராதம் விதிக்கப்படும். அனைவரும் நகராட்சி நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments