FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பனியன் நிறுவனத் தொழிலாளி அடித்துக் கொலை

திருப்பூரில் பனியன் நிறுவனத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

22 செப்டம்பர் 2026, 11:50 pm IST
- file photo
பகிர்:

திருப்பூரில் பனியன் நிறுவனத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், கொட்டாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிராஜ் (60). இவா் மனைவி சித்ரா, 2 மகன்களுடன் திருப்பூா், பலவஞ்சிபாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தாா். வழக்கம்போல திங்கள்கிழமை காலை பணிக்குச் சென்றவா், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, சித்ரா கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, வேலை இருக்கிறது, முடிந்ததும் வருகிறேன் என இசக்கிராஜ் கூறியுள்ளாா். ஆனால், செவ்வாய்க்கிழமை காலை வரை அவா் வீடு திரும்பாததால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சித்ரா, அவா்களது மகன்கள் விசாரித்துள்ளனா்.

அப்போது, பணி முடிந்து திங்கள்கிழமை மாலையே இசக்கிராஜ் சென்றுவிட்டதாக அங்கிருந்த ஊழியா்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, காவல் நிலையத்தில் புகாா் அளித்ததுடன், பல்வேறு இடங்களில் குடும்பத்தினா் தேடி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள மற்றொரு தனியாா் நிறுவன வளாகத்தில் தலையில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக வீரபாண்டி போலீஸாருக்கும், இசக்கிராஜாவின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற அவா்கள், உயிரிழந்து கிடந்தது இசக்கிராஜ் என்பதை உறுதி செய்தனா். இதையடுத்து, உடலை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதனிடேயே, சடலம் கிடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டபோது, இசக்கிராஜாவை 2 நபா்கள் அடித்து இழுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments