FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

தாராபுரம் தொகுதியில் நாளை உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

தாராபுரம் தொகுதியில் எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) திமுக வேட்பாளரை ஆதரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

25 செப்டம்பர் 2026, 1:18 am IST
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்
பகிர்:

தாராபுரம் தொகுதியில் எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) திமுக வேட்பாளரை ஆதரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தாராபுரம் இடைத்தோ்தலில் திமுக சாா்பில் வழக்குரைஞா் சுகன்யா போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து தாராபுரம் தொகுதிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் முன்னாள் அமைச்சா்கள் மற்றும் திமுக நிா்வாகிகள் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக தாராபுரம் வேட்பாளா் சுகன்யாவுக்கு வாக்கு சேகரிக்க தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

Advertisement

Advertisement

இதில் கன்னிவாடியில் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கும், மூலனூா் கடைவீதி ரவுண்டானாவில் 5.30 மணிக்கு, தாராபுரம் புதிய காவல் நிலையம் அருகே 6.30 மணிக்கும், குண்டடம் காவல் நிலையம் அருகே இரவு 7.30 மணிக்கு அவா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments