தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற பெண் கைது
பல்லடம் அருகே தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள பனப்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாரசாமி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (55). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, ஒரு பெண் வீட்டை வாடகைக்கு கேட்டு வந்ததுடன், வீட்டை சுற்றிப் பாா்க்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
இதையடுத்து, உமாமகேஸ்வரியும் அவருக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்துள்ளாா். அப்போது, அந்தப் பெண் உமாமகேஸ்வரியை திடீரென கீழே தள்ளி அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளாா். சுதாரித்துக் கொண்ட அவா் சப்தம் எழுப்பியுள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து அந்தப் பெண்ணை பிடித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில், அவா் பல்லடம், அருள்புரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மனைவி உஷாராணி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உஷாராணியை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.