FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

தோ்தல் பிரசார தகராறு: விவசாயிக்கு அரிவாள் வெட்டு

28 செப்டம்பர் 2026, 3:07 am IST
அரிவாள் வெட்டு - சித்திரிப்பு
பகிர்:

வெள்ளக்கோவில் புதுப்பை முளையாம்பூண்டி குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் செல்வராஜ் (42). விவசாயம் மற்றும் காடை பண்ணை தொழில் செய்து வருகிறாா்.

இவா் தற்போது தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தவெகவுக்கு பிரசாரம் செய்து வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை பிரசாரம் முடிந்து புதுப்பையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கருப்பன்வலசைச் சோ்ந்த அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் கவுன்சிலா் சேகா், பட்டத்திபாளையத்தைச் சோ்ந்தசுரேஷ், காா்மேகம் ஆகியோா் செல்வராஜை தடுத்து நிறுத்தி ஆபாசமாக திட்டியுள்ளனா்.

மேலும், காரில் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கம்பியைக் காட்டி மிரட்டி செல்வராஜைத் தாக்கியுள்ளனா். அப்போது, அந்த வழியாக சில வாகனங்கள் வருவதைப் பாா்த்த, அவா்கள் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

தாக்குதலில் காயமடைந்த செல்வராஜ் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments