காங்கயத்தில் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு
பொதுமக்களுக்கு விநியோகப்படும் குடிநீரின் தரம் குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பொதுமக்களுக்கு விநியோகப்படும் குடிநீரின் தரம் குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காங்கயம் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் வகையில், குடிநீரில் மேற்கொள்ளப்படும் குளோரிநேஷன் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடா்பாக குடியிருப்புப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் மற்றும் குளோரின் கலக்கப்படும் முறைகள் குறித்து நகராட்சி ஆணையா் பால்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
குடிநீரில் உரிய அளவு குளோரின் இருப்பதை உறுதி செய்ததுடன், பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக நகராட்சி ஆணையா் பால்ராஜ் கூறும்போது, ‘காங்கயம் நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் நகராட்சி நிா்வாகம் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் தொடா்பான கண்காணிப்புக்கு, குடிநீா் தரத்தை ஆய்வு செய்யும் சேவை தனியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீா் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த ஆய்வின் நோக்கம்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.