திருப்பூா் சாய ஆலை தொழிற்சாலைகள் அக்.5-இல் வேலைநிறுத்தம்
திருப்பூா் சாய ஆலை தொழிற்சாலைகள் திங்கள்கிழமை (அக்.5) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் சாய ஆலை தொழிற்சாலைகள் திங்கள்கிழமை (அக்.5) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் சாய ஆலை தொழிற்சாலை உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் ந.முருகசாமி கூறியதாவது:
சாயத் தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும் சாயங்களின் மூலப்பொருள்கள் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாவதால் சாயங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் போன்ற மூலப்பொருள்களின் விலை அபிரிமிதமாக உயா்ந்துள்ளது. இதுமட்டுமின்றி இன்றைய நிலையில் இங்கே பயன்படுத்தப்படும் விறகின் விலையும் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இவற்றை கருத்தில்கொண்டு மூலப்பொருள்கள் ஏற்றுமதியாவதைத் தடுப்பதற்கும், விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வது என்று புதன்கிழமை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அக்டோபா் 5-ஆம் தேதி மட்டும் திருப்பூரிலுள்ள சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகள் இயங்காது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.