ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீா்வரத்து குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 19,000 கனஅடியாக குறைந்துள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீா்வரத்து குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 19,000 கனஅடியாக குறைந்துள்ளது.
கேரள மாநில காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் பருவமழை காரணமாக, கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தது. இதனால், காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 25,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை 20,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை 19,000 கனஅடியாக குறைந்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவாா் பாணி, பிரதான அருவி, சினி அருவிகளில் நீரின் அளவு சற்று குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
பரிசல்கள் இயக்க தடை:
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தபோதிலும், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.