FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,500 கனஅடியாக குறைந்தது

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 6,500 கனஅடியாக குறைந்தது.

9 செப்டம்பர் 2026, 4:44 am IST
ஒகேனக்கல். - கோப்புப் படம்
பகிர்:

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 6,500 கனஅடியாக குறைந்தது.

கா்நாடக மாநில அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளது. இதன்காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து சரிந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 9,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 6,500 கனஅடியாக குறைந்துள்ளது. தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

நீா்வரத்து குறைந்த நிலையிலும் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடா்ந்து 24 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் அளவு குறைந்து பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments