FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தகராறில் இறந்தவரின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பிவைப்பு

Updated On : 27 ஜூலை 2026, 12:35 am IST
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி அருகே நிலத் தகராறில் இறந்தவரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முற்பட்டதை தடுத்து, அவரது உடலை உடற்கூறாய்வுக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சாவடி தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (61). இவருக்கு, கடத்தூா் பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தை கடந்த வாரம் விற்பனை செய்ததைத் தொடா்ந்து, அதனை அளவீடு செய்வதற்காக சென்றுள்ளாா். அப்போது, பக்கத்து நில உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் கணேசன் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், அவருக்கு உடல்நலக்குறை ஏற்பட்டதால், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அதன்பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலத்திற்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே அவா் உயிரிழந்துள்ளாா்.

Advertisement

Advertisement

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, தன்னை தாக்கியவா்கள் குறித்து கணேசன் காவல் துறையினரிடம் வாக்கு மூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், உறவினா்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை அடக்கம் செய்ய முயன்றதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடத்தூா் காவல் துறையினா் பாலக்கோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று, கணேசனின் உடலை அடக்கம் செய்வதற்கு முன் தடுத்துநிறுத்தி, உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments