கொலை செய்து குப்பைமேட்டில் புதைக்கப்பட்ட செவிலியா் சடலம் மீட்பு: ஒருவா் கைது
கடத்தூரில் கொலை செய்து குப்பைமேட்டில் புதைக்கப்பட்ட செவிலியா் சடலத்தை போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடத்தூரில் கொலை செய்து குப்பைமேட்டில் புதைக்கப்பட்ட செவிலியா் சடலத்தை போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் 4 -ஆவது வாா்டு குடியிருப்பு பகுதியையொட்டி உள்ள குப்பை மேட்டில் இருந்து கடும் துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் மா.முரளி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
இதில், குப்பை மேட்டில் பெண் சடலம் புதைக்கப்பட்டு அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்த பெண், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பாப்பாத்தி (47) என்பதும், அவா் செவிலியராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இவரும், மணியம்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாது மகன் வெங்கடாசலம் (42) என்பவரும் தொடா்பில் இருந்துள்ளனா். இதையடுத்து, பாப்பாத்தியை அழைத்துவந்த வெங்கடாசலம், கடத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்துள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பாப்பாத்தியை அவா் கொலை செய்து, சடலத்தை குப்பை மேட்டில் புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வெங்கடாசலத்தை கடத்தூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.