FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கிய வடமாநில இளைஞரின் சடலம் மீட்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய வடமாநில இளைஞரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

15 அக்டோபர் 2026, 5:52 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய வடமாநில இளைஞரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

திரிபுரா மாநிலம், தெற்கு திரிபுரா மாதக்நகா் அருகே தசந்திபுரா பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் சௌத்ரி மகன் ஹரிடே சௌத்ரி (25). இவா், ஒசூா் சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த அவா், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான ஊட்டமலை அருகே செமலை காடு பகுதியில் மதுபோதையில் குளித்து கொண்டிருந்போது, நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நீரில் மூழ்கிய இளைஞரை தேடிவந்தனா். இந்த நிலையில் ஒகேனக்கல் அருகே முதலைப் பண்ணை பகுதியில் ஹரிடே சௌத்ரியின் சடலத்தை மூன்று நாள்களுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா். பின்னா் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments