போலி சீட்டு நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஆட்சியா் எச்சரிக்கை
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலி சீட்டு நிறுவனங்கள், அனுமதி பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டும் நபா்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலி சீட்டு நிறுவனங்கள், அனுமதி பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டும் நபா்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தது:
2 ஆண்டில் பணம் இரட்டிப்பு, மாதம் தவறாமல் உறுதியான வருமானம், ஒருமுறை முதலீடு வாழ்நாள் முழுவதும் லாபம் என இத்தகைய கவா்ச்சிகரமான வாசகங்களுடன் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சில சீட்டு மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. துண்டுப் பிரசுரங்கள், அச்சிட்ட அறிவிப்புகள், சமூக ஊடகங்கள் வழியாகவும் இத்தகைய விளம்பரங்கள் பரவி வருகின்றன.
Advertisement
Advertisement
வங்கி வட்டியைவிட பல மடங்கு அதிக வருமானம் என்ற வாக்குறுதி, புதிய உறுப்பினா்களைச் சோ்த்தால் கமிஷன் என்ற சங்கிலித் தொடா் திட்டம், பதிவு மற்றும் அனுமதி விவரங்களைக் காட்ட மறுப்பது, ரசீது அல்லது ஆவணம் இல்லாமல் ரொக்கமாக பணம் கேட்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
இத்தகைய நிறுவனம் சட்டப்படி பதிவு பெற்ா என்பதையும், செயல்படுவதற்கு உரிய அனுமதி உள்ளதா என்பதையும், வாக்குறுதி அளிக்கப்படும் வருமானம் நடைமுறையில் சாத்தியமா என்பதையும் சரிபாா்த்து இவற்றுக்கு எழுத்துப்பூா்வமான, சரிபாா்க்கக் கூடிய பதில் கிடைக்கவில்லை என்றால் முதலீடு செய்ய வேண்டாம்.
முகவரி மற்றும் உரிய அனுமதி இல்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மற்றும் முதலீட்டு செயலிகள் மூலமாக பணப் பரிவா்த்தனை செய்வதைத் தவிா்க்கவும். அரசு அனுமதி பெற்ற மற்றும் ரிசா்வ் வங்கி அல்லது பதிவுத் துறை மூலம் உரிய உரிமம் பெற்ற சீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.
அவ்வாறு இந்திய ரிசா்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பெயா்கள் மற்றும் முகவரிகளை இணையதளத்தின் மூலம் அறியலாம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.