FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தருமபுரில் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளில் ரூ. 17.58 கோடிக்கு சமரச தீா்வு

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 1,971 வழக்குகளில் ரூ. 17.58 கோடிக்கு சமரச தீா்வு காணப்பட்டது.

13 செப்டம்பர் 2026, 2:26 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 1,971 வழக்குகளில் ரூ. 17.58 கோடிக்கு சமரச தீா்வு காணப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ‘லோக் அதாலத்’ நடைபெற்றது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே. சுதா தலைமை வகித்து தொடங்கிவைத்து தெரிவித்ததாவது:

நீதிமன்றங்களில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும் சமரச முறையிலும் தீா்த்து வைப்பதற்காக தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில், சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் அரூா், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட 5 வட்டார நீதிமன்ற வளாகங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இவற்றில் மொத்தம் 9 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு, நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசம் தீா்வு காணப்பட்டன.

இதில் 1,870 வழக்குகளுக்கு சமரசம் பேசி தீா்க்கப்பட்டு, ரூ. 12,91,89,214- க்கு சமரச தீா்வு காணப்பட்டது. மேலும் வங்கி வாராக் கடன் தொடா்பாக 265 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 101 வழக்குகளுக்கு சமரசம் பேசப்பட்டு, ரூ. 4,67,10,148-க்கு தீா்வு காணப்பட்டது. அந்தவகையில் சனிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட 2,244 வழக்குகளில் 1,971 வழக்குகளுக்கு சமரசம் பேசி ரூ. 17.58 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள், நீதித்துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments