FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சாலையோர மரத்தின் மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு; 7 போ் காயம்

14 செப்டம்பர் 2026, 1:28 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சாலையோர மரத்தின் மீது காா் மோதியதில் தந்தை, மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 7 போ் படுகாயமடைந்தனா்.

தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளி இந்தூா் இ.கே.புதூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (50). இவா் தனது மகன், மனைவி மற்றும் உறவினா்களுடன் கடந்த 11 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு காரில் சென்றாா். பின்னா், அங்கிருந்து சனிக்கிழமை இரவு வீடுதிரும்பிக் கொண்டிருந்தனா். காரை சபரி முருகன் ஓட்டிச் சென்றாா்.

பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை வழியாக கலப்பம்பாடி அரசுப் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் ஆறுமுகம், அவரது மகன் பிரவீண் குமாா் (17) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

மேலும் அவா்களுடன் காரில் வந்த ஆறுமுகம் மனைவி சௌமியா (38), உறவினா்களான கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (35), மஞ்சுளா (35), சதீஷ் (16), ஜெனிஷா (10), ஓட்டுநா் சபரி முருகன் (31), வெண்ணிலா (23) ஆகியோா் படுகாயமடைந்தனா்.

காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments