ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 7,000 கனஅடியாக நீடிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக நீடித்தது. பரிசல் இயக்க மூன்றாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 7,000 கன அடியாக நீடித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
கடந்த இரு தினங்களுக்கும் மேலாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
வாரவிடுமுறை மற்றும் விநாயகா் சதுா்த்தி விழா என தொடா் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்த நிலையில், பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
இருப்பினும், அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் பிரதான அருவி மற்றும் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.