ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4,500 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 4,500 கனஅடியாக சரிந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 4,500 கனஅடியாக சரிந்தது.
தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை 6,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை 4,500 கனஅடியாக சரிந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து 8-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.