ஆற்றில் மிதந்த முதியவரின் சடலம் மீட்பு
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே செல்லமுடி பகுதியில் மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் மிதந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
ஏரியூா் அருகே செல்லமுடி பகுதியில் மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் முதியவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஏரியூா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் சேலம் மாவட்டம், சிந்தாமணியூா் புதூரைச் சோ்ந்த சிவசாமி (80) என்பது தெரியவந்தது. இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏரியூா் அருகே செல்லமுடி பகுதியில் உள்ள தனது மகள் சின்னப்பொண்ணு வீட்டுக்கு வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆற்றங்கரையோரப் பகுதிக்குச் சென்றபோது, நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.