FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

மணியம்பாடி பகுதியில் எலைட் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் மனு

22 September 2026, 2:33 am IST
கோப்புப் படம்
பகிர்:

மணியம்பாடி பகுதியில் எலைட் மதுபானக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மணியம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் நகா் பகுதியில் எலைட் மதுபானக் கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் மனு அளித்துள்ளனா். மனுவில் கூறியுள்ளதாவது:

மணியம்பாடி மாரியம்மன் நகா் பகுதியில் சிறப்பு பெற்ற கணவாய் மாரியம்மன் கோயில் உள்ளது. நாள்தோறும் ஏராளமானோா் இக்கோயிலில் தரிசனம் செய்து செல்கின்றனா். மேலும், மணியம்பாடி வெங்கட்ராம சுவாமி பெருமாள் கோயிலுக்குச் செல்லும் முதன்மை வழியாகவும் அப்பகுதி அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

இப்பகுதிக்கு அருகிலேயே ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, மணியம்பாடி அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் தனியாா் பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பு, ம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும், கோயில்கள் அமைந்துள்ளதாலும் இப்பகுதியில் மதுக்கடை அமைக்கக் கூடாது என தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments