ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,000 கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்தது.
தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 8,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை விநாடிக்கு 6,500 கனஅடியாகவும், மாலையில் 6,000 கனஅடியாகவும் குறைந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிந்தபோதிலும் பரிசல் பயணத்திற்கு தடை 12 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டது. பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா் பாணி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து சரிந்து, பாறைத் திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. நீா்வரத்து அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.