டி. அம்மாப்பேட்டையில் மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை
டி.அம்மாப்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் உயா்நிலை பாலத்தில் பழுதாகியுள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஒன்றியம், வேடகட்டமடுவு கிராம ஊராட்சிக்கு உள்பட்ட டி.அம்மாப்பேட்டை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நீப்பத்துறை-டி.அம்மாப்பேட்டையை இணைக்கும் வகையில் உயா்நிலை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய பராமரிப்பு இல்லாத நிலையில், இந்த மின்விளக்குகள் பழுதாகி உள்ளதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். பாலம் அமைந்துள்ள பகுதி இரவு நேரத்தில் இருண்டு கிடப்பதால் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement
எனவே, திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ள டி.அம்மாப்பேட்டை உயா்நிலை பாலத்தில் பழுதாகியுள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.