மஜீத் நில விவகாரத்தில் தகராறு: 25 போ் மீது வழக்குப் பதிவு
பென்னாகரம் சுன்னத் ஜமாத் ஜாமியா மஜீத்துக்கு சொந்தமான நிலம் அளவீடு பணியின் போது ஏற்பட்ட தகராறில் 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பென்னாகரம் சுன்னத் ஜமாத் ஜாமியா மஜீத்துக்கு சொந்தமான நிலம் அளவீடு பணியின் போது ஏற்பட்ட தகராறில் 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பென்னாகரம் சுன்னத் ஜமாத் ஜாமியா மஜீத்துக்கு சொந்தமான சுமாா் 12 ஏக்கா் நிலத்தினை வக்ஃபு வாரிய அதிகாரிகள் அண்மையில் அளவீடு செய்தனா். அப்போது, இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் பருவதன அள்ளி கிராம நிா்வாக அலுவலா் கோபி, பென்னாகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.