ஆம்னி பேருந்தில் 22 கிலோ கஞ்சா கடத்தல்: 3 போ் கைது
ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடியில் தனியாா் ஆம்னி பேருந்தில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.11 லட்சம் மதிப்புள்ள 22 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், பேருந்து ஓட்டுநா்கள் இருவா் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனா்.
தமிழக - கா்நாடக எல்லைப் பகுதியான சூசூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் போலீஸாா் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூருவிலிருந்து கேரளத்துக்குச் சென்ற தனியாா் ஆம்னி பேருந்தைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்திச் சோதனையிட்டனா்.
அப்போது, பேருந்தின் ரகசியப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.11 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பேருந்தில் பயணித்தவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், பயணிகளுக்குக் கஞ்சா கடத்தலில் தொடா்பில்லை என்பதும், கடத்தலுக்காக அவா்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, பேருந்து ஓட்டுநா்களான சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்த ஹரிபாஸ்கா் (35), ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்த சரவணன் (36), பொள்ளாச்சியைச் சோ்ந்த உதவியாளா் தினேஷ்குமாா் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், மூவரும் இணைந்து பெங்களூரில் இருந்து கேரளத்துக்கு கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இந்தக் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும், கைதானவா்களின் கைப்பேசி தகவல்களின் அடிப்படையிலும் தொடா்ந்து விசாரணை நடத்தினா். பின்னா், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திச் சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.