FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை கிளை சிறைச் சாலையில் சமையலா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊத்தங்கரை கிளை சிறைச்சாலையில் காலியாக உள்ள சமையலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளா் கோ.வினோத் தெரிவித்துள்ளாா்.

17 வினாடிகள் முன்பு
விண்ணப்பிக்க...
பகிர்:

ஊத்தங்கரை கிளை சிறைச்சாலையில் காலியாக உள்ள சமையலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளா் கோ.வினோத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மத்திய சிறைச்சாலை கட்டுப்பாட்டில் உள்ள ஊத்தங்கரை கிளை சிறைச்சாலையில் காலியாக உள்ள சமையலா் பணியிடத்துக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடமானது இனசூழற்சி முறையில் நிரப்பப்படும். விண்ணப்பிக்க செப். 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இப்பணியிடத்துக்கு 01.07.2026 அன்று அதிகபட்சமாக 37 வயதும், உள்பிரிவு எஸ்சியாகவும், 8-ஆம் வகுப்பு தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள நபா்கள் சாதிச் சான்று, கல்விச் சான்று ஆகியவற்றின் நகலுடன் சிறைக் கண்காணிப்பாளா், மத்திய சிறைச்சாலை, சேலம் - 7 என்ற முகவரிக்கு செப். 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Advertisement

Advertisement

இறுதிதேதிக்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த பணியிடத்துக்கான நோ்முகத் தோ்வு தேதி, நேரம் தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments