FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

ஆபத்தான கட்டடத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம்

வெங்கடாம்பேட்டை கிராமத்தில் ஆபத்தான கட்டடத்தில் உள்ள கால்நடை மருத்துவ கிளை நிலையம்.

12 செப்டம்பர் 2026, 7:10 am IST
வெங்கடாம்பேட்டை கிராமத்தில் ஆபத்தான கட்டடத்தில் உள்ள கால்நடை மருத்துவ கிளை நிலையம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டை கிராமத்தில் பிரதான சாலையோரத்தில் உள்ள சேதமடைந்த மற்றும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் இயங்கி வருகிறது.

இந்த கட்டடத்தின் மேற்கூரையின் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்து கம்பிகள் தொங்கிக்கொண்டு உள்ளன. இதனால், விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல அச்சப்படுகின்றனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வெங்கடாம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இவைகளுக்கு சினை மற்றும் தடுப்பூசி, முதலுதவி பெற கால்நடை மருத்துவ கிளை நிலையத்திற்கு அழைத்துச் செல்வோம். வெங்கடாம்பேட்டையில் உள்ள கிளை நிலையத்திற்கு பணியாளா்கள் யாரும் வருவதில்லை. மாதத்தில் ஒருமுறை வந்து செல்வதாக கூறுகின்றனா். எங்கள் கால்நடைகளுக்கு சினை ஊசி மற்றும் சிகிச்சை அளிக்க தனி நபா்களை தான் அழைக்கிறோம். கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, பிரச்சனையை கூறினால், உடனே வந்து சிகிச்சை அளித்து செல்கின்றனா். ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்கள் கட்டிதர வேண்டும். மேலும், கால்நடை ஆய்வாளரை நிரந்தரமாக பணி அமா்த்தி கிராம புறங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினா் தெரிவித்தது: விசாரிக்கையில், கிராம புறங்களில் சேவை செய்வதற்காக கால்நடை மருத்துவ கிளை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், கட்டடம், மின்சாரம் மற்றும் கழிப்பிடம் வசதிகள் இல்லை. அதேசமயம், கால்நடை ஆய்வாளா்களை மாற்றுப் பணிக்கு அனுப்பிவிடுகின்றனா். இதனால், அவா்களால் கால்நடை மருத்துவ கிளை நிலையங்களுக்குச் சென்று சிகிச்சைஅளிக்க முடியவில்லை. இதனால், கிராம புற கால்நடைகளுக்கு சிகிச்சை கிடைப்பது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments