ஆர்ப்பாட்டம்
எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இந்திய மாணவர் சங்கம் எலச்சிபாளையம் ஒன்றியக் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இந்திய மாணவர் சங்கம் எலச்சிபாளையம் ஒன்றியக் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு நிழற்கூடம் அமைக்க வேண்டும், பள்ளி முன்பு பேருந்துகள் நிறுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றிச் செல்ல வேண்டும். வையப்பமலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மாவட்டக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.