FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"நீட்' தேர்வு பயிற்சியை புறக்கணித்த ஆசிரியர்கள்

நாமக்கல் அரசு ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற "நீட்' தேர்வு பயிற்சியை ஆசிரியர்கள் புறக்கணித்து

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

நாமக்கல் அரசு ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற "நீட்' தேர்வு பயிற்சியை ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வால் பயிற்சி நிறுவன வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வான "நீட்' தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக முதுகலை அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுகிறது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு "நீட்'  தேர்வுக்குப் பயிற்சி அளிக்க உள்ளனர். இதன்படி மாநிலம் முழுவதும் முதுகலை அறிவியல் ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு பயற்சி அளிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் என மூன்று இடங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மொத்தம் 283 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 நாள்கள் இப்பயிற்சி நடைபெறுகிறது. கடைசி நாளான புதன்கிழமை அன்று நாமக்கல் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன மையத்தில் உள்ள ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் பயிற்சியைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தது, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உள்ள மையத்தில் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கும், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம், புதிய வினாத்தாள் வடிவமைப்பு போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலாமாண்டு, இரண்டாமாண்டு என இரண்டு பொதுத்தேர்வுகளுக்கு கற்பித்தல் மற்றும் மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.
போட்டித்தேர்வு பயிற்சி என கூடுதல் பணிச்சுமை ஆசிரியர்களின் மீது திணிக்கப்படுவதால் வாரத்தின் 7 நாள்களும் ஓய்வின்றி கற்பித்தல் பணி மேற்கொள்வது உடல் நலம், குடும்ப நலனை பாதிக்கும். எனவே, இப்பயிற்சியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments