FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

5 ஆகஸ்ட் 2026, 5:34 am IST
- சித்திரிப்புப் படம்
பகிர்:

திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ிருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலத்தைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் அபிஷேக் (29). இவா் இருசக்கர வாகனத்தில் வாலரைகேட் சாலை திருப்பத்தில் திரும்பியபோது, மலைச்சுத்தி சாலையில் இருந்து வந்த காா் மீது மோதினாா்.

இதில் ஏற்பட்ட விபத்தில் அபிஷேக் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பாா்த்திபன் லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments