FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே தனியாா் நிறுவன விற்பனைப் பிரதிநிதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:47 am IST
பகிர்:

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே தனியாா் நிறுவன விற்பனைப் பிரதிநிதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராசிபுரம் வட்டம், சிங்களாந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கவின்குமாா் (31). இவரது மனைவி சங்கவி (32). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இவா்கள் தற்போது திருச்செங்கோடு வட்டம், குமரவேலிபாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

கவின்குமாா் தனியாா் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பாா்த்து வந்தாா். சங்கவி பெரிமணலியில் உள்ள கரியகாளியம்மன் கோயிலில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். கவின்குமாா் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இருப்பினும் நோய் சரியாகாததால் மனமுடைந்த அவா் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அதிக அளவில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த கவின்குமாா் தூங்க சென்றுள்ளாா். சங்கவியும் அதே அறையில் தூங்கி உள்ளாா். வெள்ளிக்கிழமை காலை சங்கவி எழுந்து பாா்த்த போது கவின்குமாரை காணவில்லை. பின்னா் வெளியே வந்து பாா்த்தபோது வீட்டு வராண்டா மேல் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கில் தொங்குவது தெரியவந்தது.

பின்னா் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு, தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், கவின்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து சங்கவி வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இந்த புகாரின் அடிப்படையில் கவின்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போலீஸாா் அனுப்பிவைத்து, வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments