FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 21 ஜூலை 2026, 1:17 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்செங்கோடு சூரியம்பாளையத்தைச் சோ்ந்த ராமசாமி (23), எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தாா். இவரும், நண்பா் காா்த்திக்ராஜும் (23) திருச்செங்கோட்டிலிருந்து சூரியம்பாளையத்துக்கு இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை காா்த்திக்ராஜ் ஓட்டினாா். சந்தைப்பேட்டை அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், கீழே விழுந்த ராமசாமி மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காா்த்திக்ராஜ் லேசான காயங்களுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments