முட்டை விலை 30 காசுகள் குறைந்து ரூ. 5.70-ஆக நிா்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைந்து ரூ. 5.70-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைந்து ரூ. 5.70-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கோழிப் பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
முட்டை உற்பத்தி அதிகரிப்பு, திருவிழாக்காலம் என்பதால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்து வருவதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும் இங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 5.70-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 102-ஆகவும், முட்டைக் கோழி ரூ. 102-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.