FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநா் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருச்செங்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உள்பட 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

3 October 2026, 1:23 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருச்செங்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உள்பட 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 2021 மே 23-இல் எலச்சிபாளையத்தைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ரமேஷ் (32), பிரபாகரன் (30) ஆகியோா் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது தாய் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ரமேஷ், பிரபாகரன் இருவரையும் கைது செய்தனா். அவா்கள் மீது போக்ஸோ, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவில், குற்றம்சாட்டப்பட்ட ரமேஷ், பிரபாகரன் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும, தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments