FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

மது புட்டிகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற 2 போ் கைது

மது புட்டிகளை பதுக்கி காந்தி ஜெயந்தி அன்று சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

3 October 2026, 1:18 am IST
கைது
பகிர்:

மது புட்டிகளை பதுக்கி காந்தி ஜெயந்தி அன்று சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மல்லசமுத்திரம் அருகே மாமுண்டி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள் (55). இவா் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகள் விடுமுறை என்பதால் சட்டவிரோதமாக மது புட்டிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், எஸ்.ஐ. சதீஷ்குமாா், தலைமைக் காவலா்கள் வெங்கடாசலம் ஜெய்கணேஷ் ஆகியோா் அருள் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, அங்கு மது புட்டிகளை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அருள் வீட்டில் இருந்த 22 மது புட்டிகளை கைப்பற்றி அவரை கைது செய்தனா்.

இதேபோல, எலச்சிபாளையம், புள்ளாகவுண்டம்பட்டி, பள்ளக்காடு பகுதியில் மது புட்டிகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பூபதி ராஜாவை (32) கைது செய்து, அவரிடம் இருந்த மது புட்டிகளை எலச்சிபாளையம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments