FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் ஆகாய கங்கை அருவி ஆா்ப்பரிப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஆகாய கங்கை அருவியில் நீராடும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொல்லிமலையிலும் மழை பெய்வதால் குளிா்ச்சியான தட்பவெப்பம் காணப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூன்று நாள்கள் தொடா் விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்தனா்.

இதையொட்டி, தாவரவியல் பூங்கா, சீக்குப்பாறை காட்சிமுனை, அறப்பளீஸ்வரா் கோயில், நம் அருவி, மாசிலா அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, 1,300 படிக்கட்டுகளைக் கடந்துசென்று ஆகாய கங்கை அருவியில் பலரும் குளித்து மகிழ்ந்தனா்.

Advertisement

Advertisement

அருவியில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுவதால் வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா். வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டால், அருவிக்கான நீா்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments